நான் பிறந்து வளர்ந்த
மதுரை புதிதாய் தெரிந்தது
அவளை பார்த்த நொடி முதல்
வாய் வழியில் மழலை மொழி
பேசத்தெரியாவிட்டாலும்
கண்பார்வை வலி பேசும்
மழலை ஆனேன்
நான் தலைகுனிந்து
அவள் காலை தொட்ட
நிமிடத்திலேயே
மோட்சத்தை தொட்டுவிட்டேன்
அவளோடு நான் கழித்த
பொழுதுகள்
நிழற்படமாய் நாளும் ஓடுகிறது
என் நினைவில்
என் உயிரை
எனை அறியாமல் அவள் வசம்
கொடுத்துவிட்டு
அவள் நிழலாய்
நான் மாறக்கண்டேன்
அவள் எனைக் கண்டபொழுது
அவள் கண்ணில் கண்ட
ஏக்கத்தை
கவிதையில் வர்ணிக்க முயற்சித்தேன்
முடியவில்லை
என் கண்ணீரோடு முடித்துவிட்டேன்
பிரசன்னா தமிழ்
மதுரை புதிதாய் தெரிந்தது
அவளை பார்த்த நொடி முதல்
வாய் வழியில் மழலை மொழி
பேசத்தெரியாவிட்டாலும்
கண்பார்வை வலி பேசும்
மழலை ஆனேன்
நான் தலைகுனிந்து
அவள் காலை தொட்ட
நிமிடத்திலேயே
மோட்சத்தை தொட்டுவிட்டேன்
அவளோடு நான் கழித்த
பொழுதுகள்
நிழற்படமாய் நாளும் ஓடுகிறது
என் நினைவில்
என் உயிரை
எனை அறியாமல் அவள் வசம்
கொடுத்துவிட்டு
அவள் நிழலாய்
நான் மாறக்கண்டேன்
அவள் எனைக் கண்டபொழுது
அவள் கண்ணில் கண்ட
ஏக்கத்தை
கவிதையில் வர்ணிக்க முயற்சித்தேன்
முடியவில்லை
என் கண்ணீரோடு முடித்துவிட்டேன்
பிரசன்னா தமிழ்

1 கருத்து:
கண்ணே,
கவிதை வரிகளில் கரைந்தே போய் விட்டேன்... நம் சந்திப்பை உன் வரலாற்றில் பதித்து( நாளை உலகம் போற்றும் கவிஞன் நீ)என்னை சாகா வரம் பெறச் செய்தாய்!!! நன்றி சொல்ல வார்த்தையில்லையடா செல்வமே!!!!
கருத்துரையிடுக