சனி, 21 ஏப்ரல், 2012


எல்லோருக்கும் எண் கணித ராசி
பார்த்து பெயர் வைப்பார்கள்
ஆனால்
எங்களுக்கோ எண்ணயே பெயராய்
வைத்துள்ளார்கள்

ஐந்தறிவு ஜீவன்களை ஆசையாய்
செல்ல பெயரோடு அழைப்பவர்கள்
எங்களுக்கென்று தனிப்பெயர் இருந்தும்
அது என்றே அழைகின்றனர்

பிரம்மன் எங்கள் பிறப்பில் செய்த
தவறிற்கு
பிரம்படி வாங்கும் பிணமாய் போகின்றோம்
தினம் தினம்

உங்களை போலவே அழுதுகொண்டே பிறந்த
குழந்தைகள் நாங்கள்
ஆனால் இன்றும் அழுது கொண்டுதான்
இருக்கின்றோம் உங்கள் வாய் வழி வரும்
வார்த்தைகளை கேட்டு

கடவுளுக்கு ஆடுகளை பலி கொடுப்பதை
போலதான் எங்களையும்
பலி கொடுக்கின்றீர்கள் இந்த
சமுகத்தில் நரம்பில்லா நாக்கை வைத்து

உலகம் எனும் கதம்பத்தில் யார் வேண்டுமானாலும்
பிடுங்க கூடிய காகித பூக்களாய் நாங்கள்

ஜாடையாக குத்தி பேசும் போது
ஒவ்வொரு வார்த்தையும்
கூனிக்குறுகச் செய்கிறது

எல்லோருக்கும் இரத்தம் சிவப்பு
என சிந்திக்க மறந்த
ஆண்களின் பார்வையில் அவமான சின்னங்கள்
பெண்களின் பார்வையில் அவல ஜென்மங்கள்

அன்று அரண்மனையை காத்த
அண்ணக்கர்கள் நாங்கள்
இன்று அழுகை ஒன்றையே அரவணைப்பாய்
கொண்ட அபல அரவாணிகள் நாங்கள்

எங்களுக்காக ஒரு வட்டம் வரைந்து
வாழ்ந்தாலும்
சம்பட்டி அடி அடிக்கின்றது
காமகனின் கண் பார்வைகள்

மண்சோறு தின்றோ
அலகு குத்தியோ காவடி சுமந்தோ
இந்த வரம் வாங்கவில்லை

பிறப்பினால் ஒரு முறை சபிக்கப்பட்டாலும்
ஏன் என்ற விடையை கூட அல்ல
கேள்வியை தேடி தேடி
வளர்பிறை இல்லாத
தேய்பிறை நிலவாய் நிலைகுலைந்து
போகின்றோம்

முடிவு தெரியாமலும் முகவரி இல்லாமலும்
முக்காடு போட்டு முகம் மறைத்து
முடங்கி கிடந்தாலும்
எங்கள் சமுகத்தின் சூன்ய முடிச்சு அவிழாத
என்று பெருமூச்சு விட்டபடி
பெரு முயற்சி எடுத்து வருகின்றோம்

எத்தனை முறை விடையை தேடி சென்றாலும்
கேள்வியாகத்தான் இருந்கின்றோம்
எங்களுக்கு

பிரசன்னா தமிழ்
 

ஞாயிறு, 15 ஏப்ரல், 2012

காந்த இதயம்



நான் கார்மேக மழைத்துளியாய்
நனைத்தாலும் கரையவில்லை
எனை ஈர்க்கும் அவளின்
காந்த இதயம்

பிரசன்னா தமிழ்

நட்ப்போடும் காதலோடும்

நட்ப்போடும் காதலோடும் 

தயக்கத்துடன் அறிமுகமான 
நாம்
இன்று தாராளமாய் அரவணைத்து 
கொள்கிறோம்
நட்பின் போர்வையில்

எனது கனவுகள் அனைத்தும்
விதையாய் விதைத்தேன் உன்னுள்
நட்பு எனும் கரிசல் மண் துணையுடன்

நம் கைகள் கூட சிறகுகளாக மாறின
நட்பு எனும் வானில் சிறகடிக்க

நாள்தோறும் நாம் உரையாடினாலும்
நாம் பிரிகையில் ஏற்படும்
மௌனப்பார்வைகளும்
மௌன வார்த்தைகளும் தான்
என் கனவில்
இதயம் எதிரொலிக்க பேசுகிறது

அழுது கொண்டே பிறக்கும்
குழந்தை போலத்தான் பிறந்தது
நம் காதலும்
நம் மௌனத்தின் வழி மௌனமாய்

நட்பின்பால் பரிட்சியமான நாம்
காதலன் என்ற உருவில்
நீ
புதிதாய் பதிந்தாய் என் சிந்தையில்

உனை பார்க்கும் முன்
காதலை சொல்லிவிடத் துடிக்கும்
என் இதயம் கூட மயங்கி விடுகிறது
உன் வசீகரப் பார்வையை பார்த்தவுடன்

நாளுக்கு நாள் என் நிழல் நீயாகக் கண்டேன்

உள்ளிருப்பு போராட்டம் போல்
எனக்குள்ளும் போராட்டம்

என் சிந்திக்கும் என் மனதிற்கும்

மனதில் உள்ள காதலை சொல்ல
முற்ப்பட்டால்
சிந்தை தடுக்கிறது

சிந்தைப்படி நட்புடனே இருப்போம்
என்றால்
மனம் கதறுகிறது

நட்ப்போடே இருந்து விடுவோம்
என எனக்கு நானே சமாதானம்
ஆனாலும்
சுனாமி போல் எனை தாக்குகிறது
உனது நித்திரை நினைவலைகள்

நடப்போடு நம் கைகள் உரசினாலும்

நீ
என்னை கனவில் கட்டியனைத்ததுதான்
கண் முன்னே வந்து செல்கிறது

என் காதலை சொல்லாமல்
சொல்லிவிடலாம்
என நான் முயற்சித்தாலும்
நீ பாடத்தை புரிந்து கொள்ளும்
அளவிற்க்கு கூட
என் காதலை புரிந்து கொள்ளவில்லை

காந்தியின் அகிம்சை வழியில்
போராட்டம்
எனக்குள் நடந்தாலும்
பட்ட காயங்கள் எல்லாம்
உன் காதலைத்தான் மருந்தாய்
கேட்கிறது

என் முற்றத்து நிலாவில்
உன் முகம் பார்த்து
நான் எழுதிய கடிதங்கள்
கடலை காணமல்
போகச் செய்துவிடும்

உனை நினைத்து
நான் எழுதி சுயநினைவற்று இருக்கும்
என் காதல் வரிகளுக்கு
சுயநினைவு வருவது எப்போது

மண்டி இட்டு தொழுகும்
நான்
கை கூப்பி தொழுவது எப்போது

என் பெயரின் பின்னால்
உன் பெயரை உரிமையுடன்
எழுதுவது எப்போது

என் காதலை காலம்தான்
உனக்கு உணர்த்தும்
என்ற
நம்பிக்கையில்

பிரசன்னா தமிழ்

ஞாயிறு, 8 ஏப்ரல், 2012

வானம் மேகமாய் 
அவள் உருவத்தை வரைந்தது


சூரியன் நிழலாய்
அவள் உருவத்தை வரைந்தது

நான் அவளை என் கவிதையாக
வரைய முயர்ச்சித்தேன்

முடியவில்லை

அவள் பெயரின் பின்னால்
என் பெயரை எழுதி
முடித்துவிட்டேன்

பிரசன்னா தமிழ்

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

அன்பே சிவம்

கண்களால் கண்டு கொள்ளப்படாத வரையில்தான்
அவன் கடவுள்
ஒரு வேளை அவன் கண்டு கொள்ளப்பட்டால்
எனக்கு ஏன் இதை செய்யவில்லை என்று
கடவுளையும் கல்லால் அடிக்கும் சமூகம் இது

நம்மை கடவுளாக நினைத்து
கை கூப்பி உதவி கேட்டால்
இல்லை என்று சொல்லி
இல்லாத கடுளின் முன்பு
கை கூப்பி நிற்கும் சமூகம் இது

பட்டினியால் பலபேர் படுத்திருக்க
உனக்கு படையல் படைக்கும் சமூகம் இது

வறுமை ஒரு புறம் வாட்டி எடுக்க
உனக்கு கோடி கோடியாய்
கொட்டி கொடுக்கும் சமூகம் இது

உனக்கு நரபலி கொடுத்தால்
நகரம் சொர்க்கமாகும் என்று
பலி கொடுத்து கொடுத்து
சொர்க்கத்தை நரகமாக்கும்
சமூகம் இது

நீ இருக்கும் கருவூலத்திலேயே
இன்று பல கருக்களை காணிக்கையாக்கும்
சமூகம் இது

மணி அடித்தால் சாப்பாடு என்று
உனக்கு மணி அடித்தே
மணியை கழிக்கும் சமூகம் இது

உன்னை கண்டால் நல்ல நேரம்
கதவை தட்டும் என்று
கிடைக்கும் நேரத்தை எல்லாம்
கண்மூடியே மூடனாய் போகும்
சமூகம் இது

உன்னை தரிசனம் செய்தால்
சங்கடங்கள் நீங்கும் என்று
தாயை விரட்டும் சமூகம் இது

இதற்க்கு இந்த சமூகம்தான்
சுமூக முடிவு எடுக்க வேண்டும்

அன்பே சிவம் எனும்

பிரசன்னா தமிழ்
தனிமையில் தவிக்கும்
தவிப்பு கூட சுகம்தான்

சுனாமி போல்
உன் நினைவலைகள்
தாக்குவதால்

பிரசன்னா தமிழ்
நீ
எனக்குள் வந்த பின்
ஒரு
உத்வேகம்

உனக்காகவாவது வாழலாம்
என்று

பிரசன்னா தமிழ்
கண் இருந்தும் குருடாக
செவி இருந்தும் செவிடாக
வாய் இருந்தும் ஊமையாக
கை, கால் இருந்தும் முடாமாக
உயிர் இருந்தும் ஜடமாக
வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்

தவறு நடக்கையில் தட்டிக் கேட்க்காமல்

பிரசன்னா தமிழ்

புதன், 28 மார்ச், 2012


நான் பிறந்து வளர்ந்த
மதுரை புதிதாய் தெரிந்தது
அவளை பார்த்த நொடி முதல்

வாய் வழியில் மழலை மொழி
பேசத்தெரியாவிட்டாலும்
கண்பார்வை வலி பேசும்
மழலை ஆனேன்

நான் தலைகுனிந்து
அவள் காலை தொட்ட
நிமிடத்திலேயே
மோட்சத்தை தொட்டுவிட்டேன்

அவளோடு நான் கழித்த
பொழுதுகள்
நிழற்படமாய் நாளும் ஓடுகிறது
என் நினைவில்

என் உயிரை
எனை அறியாமல் அவள் வசம்
கொடுத்துவிட்டு
அவள் நிழலாய்
நான் மாறக்கண்டேன்

அவள் எனைக் கண்டபொழுது
அவள் கண்ணில் கண்ட
ஏக்கத்தை
கவிதையில் வர்ணிக்க முயற்சித்தேன்
முடியவில்லை
என் கண்ணீரோடு முடித்துவிட்டேன்

பிரசன்னா தமிழ்
என் 
இரத்த சிவப்பணுக்கள் 
யாவும் 
வெள்ளையணுக்களாய்
மாறினாலும் 
தடுக்க முடியவில்லை 

விந்தணுவின் விதையிலிருந்து 
வந்த அவளின் 

காதல் நோயை 

பிரசன்னா தமிழ் 
நான் காய்ச்சல் என்று 
மருத்துவரை அணுக 
அவர் 
வைரஸ் காய்ச்சல் 
என்று மருந்தாக
உன் முத்தத்தை 

பின்புதான் 
என் பின் மண்டைக்கு 
உரைத்தது 
அது 

காதல் வைரஸ் என்று 

பிரசன்னா தமிழ் 

ஞாயிறு, 25 மார்ச், 2012

நிலவாய் அவள் முகம்

காலத்தின் கட்டாயத்தால்

நீ
கடல் கடந்து சென்றாய்

அன்று முதல்
அந்த கடலில் நிலவாய்
அவள்முகம் 
நித்திரை வேளைகளில்